சென்னை கிண்டியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

இளம் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பாக சென்னை கிண்டியில் ஜனவரி 9ஆம் தேதி தொழில் முனைவோர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை மறுநாள் (ஜனவரி 9) சென்னை கிண்டியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதைத் தாண்டிய ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.