ஸ்வஸ்திகாவின் பொருள்

ஸ்வஸ்திகா என்பது சமஸ்கிருத வார்த்தையான 'ஸ்வஸ்திக்' என்பதிலிருந்து உருவானது. இது 'சு', அதாவது 'நல்லது, என்றும்' அஸ்தி' என்பதற்கு 'இருக்க வேண்டும்', என்று பொருள் தருகிறது.


எல்லாம் இணைந்து நல்லது இருக்க வேண்டும் என்று பொருளாகிறது. செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்க பண்டைய இந்திய மத நூல்களான வேதங்களில் ஸ்வஸ்திகா அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?


இந்து மதம், புத்த மதம் , சமணம், கிறிஸ்தவம், மற்றும் கிரேக்க மற்றும் ரோமானிய புராணங்கள் போன்ற மதங்கள் ஸ்வஸ்திகாவுக்கு மாறுபட்ட அர்த்தங்களைக் கூறியுள்ளன. இந்து மதத்தில், கடிகார திசையில் ஸ்வஸ்திகா (அதன் கைகளை வெளிப்புறமாகவும் கொண்ட அடையாளமாக) 'ஸ்வஸ்திகா' அடையாளப்படுத்தப்படுகிறது.


சூரியக் கடவுளான 'சூரியனை ' குறிக்கிறது.


இது வானத்திலிருந்து சூரியனின் இயக்கத்தை அதாவது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சித்தரிக்கிறது. இதன் கடிகார எதிர்திசை வடிவம் எதிர்மறை பொருளை தருகிறது. திகிலூட்டும் தெய்வமான 'காளி' உடன் தொடர்புடைய இரவு மற்றும் தாந்த்ரீக சடங்குகள் போன்ற எதிர்மறை தாக்கத்தை உணர்த்துகிறது.


இதுவே புத்த மதத்தில் பார்த்தால் ஸ்வஸ்திகா செழிப்பு, ஆன்மீகம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. சமண மதத்தில், இது அவர்களின் ஆன்மீக ஆசிரியர்களுக்கு ஒரு அடையாளமாகும். கிறித்துவத்தில், சிலுவைக்கு இணையான அடையாளமாக, குறிக்கிறது.


ஃபீனீசியர்கள் ஸ்வஸ்திகாவை சூரியனின் புனித சின்னமாக குறிப்பிட்டனர். ஐரோப்பாவின் பண்டைய மதங்கள் ஸ்வஸ்திகாவை மின்னல் தாக்கத்தின் அடையாளமாகப் பயன்படுத்தியுள்ளனர். இது நார்ஸ் கடவுள் 'தோர்' ஆகவும் ,


ரோமானிய கடவுள் 'வியாழன்' ஆகவும் மற்றும் கிரேக்க கடவுள் 'ஜீயஸ்' ஆகவும் சித்தரிக்கப்படுகிறது. சில பூர்வீக அமெரிக்க பழங்குடியினரும் 'நல்ல அதிர்ஷ்டம்' என்பதைக் குறிக்க ஸ்வஸ்திகா சின்னத்தைப் பயன்படுத்தினர்.