ஐரோப்பிய தத்துவங்கள்

வளர்ந்து வரும் ஐரோப்பிய கிழக்கு மதங்கள் மற்றும் ஐரோப்பிய தத்துவங்கள் இந்த ஸ்வஸ்திகா அடையாளத்தை புகழ்படுத்தினர்.


டிராய் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் கலைப்பொருட்கள் கூட ஸ்வஸ்திகா மையக்கருத்துக்களைக் கொண்டிருந்ன. அவை ஜெர்மனியில் சில இனவெறி குழுக்களை மேலும் தூண்டின. ஸ்வஸ்திகாவின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு இறுதியில் 1920 ஆம் ஆண்டு நாஜி கட்சியின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


ஆனால் இது ஸ்வஸ்திகா அடையாளத்தின் அர்த்தத்தையே மாற்றியது. ஏனெனில் இது இரண்டாம் உலகப் போரின்போது மில்லியன் கணக்கான யூதர்களின் அடக்குமுறை மற்றும் இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்தியது. இது விரைவில் உலகம் முழுவதும் வெறுப்பின் அடையாளமாக மாறியது.


இதை கட்சியின் சின்னமாக முதலில் பயன்படுத்தியவர் நாஜி அல்ல. ஏற்கனவே முதலாம் உலகப் போருக்குப் பிறகு 'தூய இனம்' என்ற எண்ணத்துடன் ஜெர்மனியின் பல தேசியவாத குழுக்கள் பயன்படுத்தி வந்தன.