சென்னையின் மையத்தில் அமைந்துள்ள பல நட்சத்திர உணவகங்களில் உணவருந்தியிருப்போம். அவற்றுள் நமக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்களை சுலபமாக பட்டியலிடவும் முடியும். காரணம், ஏதோ ஒரு வகையில் அவைகளைப் பற்றி நம் நட்பு வட்டத்திலோ, சமூக வலைதளங்களிலோ விவாதிக்கப்பட்டபடி இருக்கும். ஆனால், பூமியை நிலா பார்ப்பது போல, நகருக்கு வெளியே பாலிஷாக அமைந்திருக்கும் ஒரு நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்டால் எப்படி இருக்கும். புதிதாக, ஆர்வமுடைய ஒரு விஷயத்தைச் செய்தால், “Breadth of fresh air”, என்ற வாசகம் பயன்படுத்தப்படும். அப்படித்தான் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீ பெரும்பத்தூரில் அமைந்துள்ளது Mercure Hotel. உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு அளிக்கும் விதத்தில் ஒரு உணவகம் வேண்டுமானால் உங்கள் பட்டியலில் இந்த உணவகத்தையும் சேர்க்கலாம்.
Melange எனப் பெயரிடப்பட்டுள்ள Mercure-ன் ரெஸ்டாரென்ட்டில், Chef சைத்தன்யாவுடன் சாப்பிட ஆரம்பித்தோம். ஆரம்பித்திலேயே மெனுவில் இருக்கும் பல்வேறு உணவுப் பெயர்கள் ஆர்வத்தைத் தூண்டின. Fresh farmer's Greek salad, Tenderloin Steak, Mutton Aap Ki Pasand, Tiramisu, Beef Bolognese, Malai Broccoli, Nasi Goring, Kung Pao Chicken, Tom Yum Soup என மெனுவில் இருக்கும் ஒவ்வொரு உணவுப் பொருளும் ஒவ்வொரு கதையைச் சொல்லின.
உதாரணத்திற்கு சாலட் பற்றி கேட்டால், அவர்கள் விடுதிக்கு உட்பட்ட இடத்திலேயே இயற்கை முறையில் விவசாயம் செய்து விளைவித்த காய்கறிகளால் பிரத்யேகமாக செய்யப்பட்டு, மிகவும் ஃப்ரெஷாக பரிமாறப்படுகிறது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் சாலடின் ஒரு ஸ்பூனை அள்ளிச் சாப்பிடும்போது, புதிதாய் பறித்த காய்கறியின் வாசம் நாசிகளின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பின.
Nasi Goring என்பது இந்தோனேஷியாவில் செய்யப்படும் உணவு. இறால் கொண்டு செய்யப்பட்ட அப்பளம் போன்ற சிப்ஸ், ஃப்ரைடு ரைஸ், மேலே ஒரு பெரிய ஹாஃப் பாயில் என பக்காவான டிசைனில் வைக்கப்பட்டது. நம்மூர்களில் கிடைக்கும் ஃப்ரைடு ரைஸுக்கும் அதற்கும் ஒரு ஒற்றுமை இருந்தாலும், இந்தோனேஷியாவின் தொன்மத்தை அது உள்ளடக்கியிருந்தது.